ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக திலங்க சுமதிபாலவை நியமிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

இதுவரை அந்தப் பதவியை வகித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை அந்தப் பதவியில் இருந்து நீக்கிய கட்சியின் செயற்குழு மேற்குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரான திலங்க சுமதிபாலவுக்கு, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.