குவைத்தின் Zakath House நிதியுதவியுடன் எருக்கலம்பிட்டியில் கட்டிமுடிக்கப்பட்ட 75 வீடுகள் கையளிப்பு

Rihmy Hakeem
By -
0


 யுத்தத்திற்கு பிற்பாடு மீளக் குடியேறியுள்ள மக்களுக்கான வீட்டுத் திட்டமானது பூரணத்துவம் அடையாத நிலையில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் கோரிக்கைக்கு அமைய குவைட் நாட்டின் ஸகாத் ஹவுஸின் (Zakath House) நிதியுதவியோடு ISRC நிறுவனத்தின் அனுசரணையில் எருக்கலம்பிட்டி ஸகாத் பவுண்டேசனினின் Zakath Foundation) பூரண ஒத்துழைப்புடன் மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டி கிராமத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள 200 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்ட செயற்றிட்டத்துக்கு அமைய முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 75 வீடுகளை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிதிகள் இணைந்து உத்தியோகப்பூர்வமாக பயனாளிகளுக்கு இன்று (06) குறித்த வீடுகளை கையளித்து வைத்தனர்.

தலா 13 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த வீடுகளை பயனாளிகளுக்கு கையளித்து வைக்கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரென்லி டீமெல்,  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் R. சூரிய ஆராய்ச்சி, மன்னார் பிரதேச செயலகப் பிரதேசச் செயலாளர் எம். பிரதீப்,  ISRC நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான A. மிஹ்லார்,குவைட் நாட்டின் இலங்கைக்கான தூதுவரின் இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பிர்தவ்ஸ் (நளீமி), மன்னார் பிரதேசச் சபைத் தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)