இந்த மாதத்தில் கடந்த 11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு இம்மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

டிசம்பர் மாதத்தில் 25 ஆயிரத்து 24 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ரஷ்யா, இந்தியா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, ஜேர்மன், அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்தோர் இந்த மாதத்தில் வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளி விபரங்களுக்கு அமைவாக , இந்த வருடத்தில் 6 இட்சத்து 53 ஆயிரத்து 11 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர்.

இந்தியா, பிரிட்டன், ரஷ்யா, ஜேர்மன் பிரான்ஸ், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.

இதேவேளை ஆகக்கூடுதலான சுற்றுலா பயணிகள் இந்த வருடம் மார்ச் மாதத்தில் இலங்கை வந்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.