2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 6,417,031 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. 

2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், தற்போதைய GDP சதவீத மாற்றம் 45.2 சதவீதமாகவும், ஆண்டுக்கு ஆண்டு GDP வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக 11.8 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் விவசாய நடவடிக்கைகள் 8.7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த காலப்பகுதியில் ஒட்டுமொத்த தொழில்துறை நடவடிக்கைகள் 21.2% வீழ்ச்சி கண்டுள்ளது. 

2021 ஆம் ஆண்டின் இதே காலாண்டின் 1.7 சதவீத பின்னடைவுடன் ஒப்பிடும்போது, சேவைத் துறையின் செயல்திறன் 2.6% வீழ்ச்சியடைந்துள்ளது 

மூன்றாவது காலாண்டில், மீன்பிடித் துறையும் 33.5% பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. 

இந்த காலாண்டின் ஆரம்ப கட்டங்களில் நிலவிய அதிக பணவீக்கம், எரிசக்தி நெருக்கடி, அதிக வட்டி விகிதங்கள், உற்பத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான உள்ளீடுகளின் பற்றாக்குறை, உள்ளீடுகளின் அதிக விலை, சிமென்ட் தட்டுப்பாடு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு போன்ற விடயங்கள் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன. 

மேலும், உரப் பயன்பாடு மற்றும் வேளாண் இரசாயனத் துறைகளுடன் தொடர்புடைய போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு, பொருட்களை விநியோகிப்பதில் உள்ள சிரமங்கள், மக்களின் உண்மையான வருமானம் குறைவதால் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் – சேவைகளின் தேவை குறைந்தமை ஆகியவை பொருளாதாரத்தை வீழ்ச்சியை நோக்கி இட்டுச் சென்றுள்ளன. 



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.