மாலைதீவு முன்னாள் ஜனாதிபதிக்கு 11 வருட சிறை தண்டனை

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 மில்லியன் டொலர் அபராதமும் விதித்து மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனியார் நிறுவனமொன்றிடமிருந்து இலஞ்சம் பெற்றமை தொடர்பில், ஊழல் மற்றும் பணச்சலவை சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தவரென அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தமது தீர்ப்பில் அறிவித்துள்ளது.

எனினும், தாம் எந்த தவறும் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி யாமீன் மறுத்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் அப்துல்லாஹ் யாமீன் தமது அதிகாரத்தை இழந்தார். 

எனினும், 2023 இல் நடைபெறவுள்ள தேர்தலுக்கு மாலைதீவின் முற்போக்குக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஏற்கனவே, ஒரு பில்லியன் டொலர் அரச நிதியை மோசடி செய்த குற்றத்துக்காக, 2019 ஆம் ஆண்டில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

 அவரது தண்டனை விதிப்புக்கு பிறகு, யாமீன் 2020 இல் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.