வயது நிறைவடைந்ததையடுத்து 11 சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (31) ஓய்வுபெற உள்ளனர்.

இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 09 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் ஓய்வு பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இலங்கை பொலிஸ் நிர்வாகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, ஊவா மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.எப்.யு. பெர்னாண்டோ ஆகியோர் இன்று முதல் ஓய்வுபெற உள்ளனர்.

அத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அகஸ்டஸ் பெரேரா, வன்னி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன அழககோன், வடக்கு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விஜித குணரத்ன, சமூக பொலிஸ் மற்றும் பாதுகாப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஜகத் பலிஹக்கார ஆகியோர் இன்றுடன் ஓய்வு பெறவுள்ளனர். .

கேகாலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தன, பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான கித்சிறி ஜயலால் அபோன்சு, களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான எஸ்.டி.எஸ்.பி சந்தநாயக்க, நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான எச்.எஸ்.என். பீரிஸ் மற்றும் மேல் மாகாணத்தின் வடக்கு குற்றப்பிரிவு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரிஷாந்த ஜயக்கொடி ஆகியோர் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.