உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் இந்திய நிறுவனம் தயாரித்த மருந்தைக் குடித்ததால் உயிரிந்துள்ளதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

தயாரித்த மருந்தைக் குடித்ததால் உயிரிந்துள்ளதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

அண்மையில், உஸ்பெகிஸ்தானில் இருமலுக்கு மருந்து எடுத்துக்கொண்ட 21 குழந்தைகள் உடல்நலக் குறைவுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 18 குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய அந்நாட்டு சுகாதாரத்துறை ஓர் அறிக்கையை  வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் நொய்டா நகரில் உள்ள மரியோன் பயோடெக் (Marion Biotech) நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தை குடித்த குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகக் கூறிப்பட்டுள்ளது. 

மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்தக விற்பனையாளர் பரிந்துரையின்படி இருமலுக்காக இந்த மருந்தை குழந்தைகளின் பெற்றோர் கொடுத்து வந்துள்ளனர். தினமும் 3 முறை வீதம் 2-7 நாட்களுக்கு 2.5 முதல் 5 மி. அளவுக்கு இந்த மருந்தைக் கொடுத்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இந்த மருந்தை ஆய்வு செய்தபோது அதில் நச்சுத்தன்மை கொண்ட எத்திலீன் கிளைகோல் இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த மருந்தை 1 முதல் 2 மில்லி வரை மட்டுமே எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படும் என்றும் இந்த அளவைவிட அதிகமாக எடுத்துக்கொண்டால் ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் உஸ்பெகிஸ்தான் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டு மருந்துக் கடைகளிலிருந்து டாக்-1 மேக்ஸ் (Doc-1 Max) மருந்துகளைத் திரும்பப் பெறுவதாக உஸ்பெகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. உஸ்பெகிஸ்தான் அரசின் குற்றச்சாட்டின் எதிரொலியாக, இந்தியா தரப்பில் மருந்துகளை ஆய்வு செய்யும் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

கடந்த அக்டோபரில் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்தியாவில் தயாரித்த தரமற்ற 4 இருமல் மருந்துகளைக் குடித்த 70 குழந்தைகள் உயிரிழந்தனர் எனப் புகார் எழுந்தது. அந்த மருந்தை இந்தியாவைச் சேர்ந்த மெய்டென் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த மருந்து குளித்து உலக சுகாதார அமைப்பும் ஆய்வு செய்ய முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.