2022 ஆம் ஆண்டை வழியனுப்பும் வகையில் டூடுலை மாற்றியுள்ள கூகுள்!

பிரபல தேடுதல் தளமான கூகுள் இணையத்தில் பல சாதனைகளைப் படைத்து தன்னிகரற்று ஜொலித்து வருகிறது.

தேடுபொறியில் தொடங்கி, மென்பொருட்கள், ஒன்லைன் விளம்பரம் என இணையத்தின் அனைத்துத் துறைகளிலும் பரந்து விரிந்திருக்கிறது.

கலிபோர்னியாவின் ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு மாணவர்கள் 1998-ஆம் ஆண்டு தொடங்கிய கூகுள் நிறுவனம் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.

இத்தகைய கூகுள் நிறுவனம் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று இரவு 12 மணியுடன் 2022-ம் ஆண்டு நிறைவடைந்து 2023-வது புத்தாண்டு பிறக்க உள்ளது.

இதனால் 2022-ம் ஆண்டை வழியனுப்பும் விதமாக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டு உள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.