உக்ரைன் நேட்டோவில் சேர்வதற்கு கடுமையான எச்சரிப்புகளை விடுத்துவந்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனில் போர்தொடுத்தது. பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள், ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கெதிராக தீர்மானம், ரஷ்யா மீது அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத் தடை என பல நிகழ்ந்தும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முற்றுப்பெறவில்லை.

கடந்த வாரம் கூட, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உயர்மட்ட ஆலோசகரான மைக்கைலோ போடோலியாக், ரஷ்யா - உக்ரைன் மோதலின்போது உக்ரேனிய படைவீரர்கள் 10,000 முதல் 13,000 பேர் வரை கொல்லப்பட்டனர்' என்று அதிர்ச்சிகர தகவலை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் அதிபர் ஜெலென்ஸ்கியும் கிட்டத்தட்ட 10 மாதங்களாக ரஷ்யாவுக்கெதிராக போராடி வருகிறார்.

2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த நபராக  The spirit of Ukraine என ஜெலன்ஸ்கியை தேர்வு செய்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.