ஐபிஎல் வீரர்களின் பதிவு நவம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவுற்ற நிலையில் ஐபிஎல் ஏலத்தில்  23 இலங்கை வீரர்கள் பதிவு செய்யபட்டனர்!.

 2022, டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறவுள்ள, டாட்டா ஐபிஎல்( TATA IPL 2023) இலங்கையைச் சேர்ந்த 23 வீரர்கள் வீரர்கள் உட்பட மொத்தம் 991 வீரர்கள், ஏலத்தில் பங்கேற்பதற்காக கையெழுத்திட்டுள்ளனர்.

 இந்த ஒப்பந்தத்தில் மொத்தம் 714 இந்திய வீரர்கள் மற்றும் 277 வெளிநாட்டு வீரர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

TATA IPL 2023 வீரர்கள் பட்டியலில் 185 சர்வதேச அணிகளின் வீரர்கள், 786 சர்வதேச அறிமுகம் அற்ற வீரர்கள் உள்ளனர்.

விரிவான பட்டியல் பின்வருமாறு,

இந்தியன் தேசிய அணியின் (19 வீரர்கள்)

சர்வதேச அணிகளின் (166 வீரர்கள்)

இணை அங்கத்துவ நாடுகளின் (20 வீரர்கள்)

பங்கு கொள்ளவுள்ள வீரர்களின் நாடுகள்  வாரியாக 277 வெளிநாட்டு வீரர்களின் விபரம் கீழே தரப்படுகின்றது.

அவுஸ்திரேலியா - 57
ஆப்கானிஸ்தான் - 14
பங்களாதேஷ் - 6
அயர்லாந்து - 8
இங்கிலாந்து - 31
நெதர்லாந்து - 7
நமீபியா - 5
தென்னாப்பிரிக்கா - 52
மேற்கித்திய தீவுகள் - 33
நியூசிலாந்து - 27
ஸ்கொட்லாந்து - 2
இலங்கை - 23
சிம்பாப்வே - 6
ஐக்கிய அரபு ராட்சியம் - 6

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.