தென் அமெரிக்கா நாடான கொலாம்பியாவில் உள்ள பியூப்லோ ரிகோ பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

மேலும், பலர் மண் சரிவில் சிக்கி புதையுண்டு போனதாகவும், அவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.

இதுதொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதி தெரிவிக்கையில்,  நிலச்சரிவில் சிக்கி 3 சிறுவர்கள் உட்பட 27 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்தார். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.