பிரான்ஸுடனான போட்டியில் 2 பெனால்டி வாய்ப்புகள் மறுப்பு - நடுவர் மீது மொரோக்கோ முறையீடு

பிரான்ஸுக்கு எதிரான உலகக் கிண்ண அரையிறுதியில் தோல்வியை சந்தித்த மொரோக்கோ அணி அந்தப் போட்டியில் நடவராக செயல்பட்ட சீசர் ரெமோசின் செயற்பாடு பற்றி முறையிட்டுள்ளது.

அல் பைத் அரங்கில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

எனினும் உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆபிரிக்க மற்றும் அரபு நாடான மொரோக்கோ இந்தப் போட்டியில் சிறப்பாக செயற்பட்டு அதிக நேரம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இதில் ஹெர்னான்டஸ் மீது தவறிழைத்ததாக மொரோக்கோ வீரர் சொபியான் பவுபால் மீது நடுவர் மஞ்சள் அட்டை காட்டியது சர்ச்சைக்குரிய முடிவாக மாறியது. இந்த முடிவு மொரோக்கோவுக்கு சாதகமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அப்போது மொரோக்கோவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு முதல் பாதி ஆட்டத்தில் மொரோக்கோவுக்கு இரு பெனால்டி வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

“நியாயத்தை கேட்டு எமது தேசிய அணியின் உரிமையை பாதுகாக்க பின்வாங்கப்போவதில்லை” என்று மொரோக்கோ கால்பந்து சம்மேளனம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இது பற்றி சர்வதேச கால்பந்து சம்மேளத்திற்கு முறையிட்டிருப்பதாகவும் மொரோக்கோ உறுதி செய்துள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.