மனைவி, 4 குழந்தைகள் வெட்டிக்கொலை: தூக்கில் தொங்கிய நிலையில் விவசாயின் சடலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பழனி (வயது 40) விவசாயி. இவரது மனைவி வள்ளி(37), மகள்கள் திரிஷா 15), மோனிஷா (14), பூமிகா (9), சிவசக்தி (7) மகன் தனுசு (4) பழனி ஒரவந்தவாடி மதுரா மோட்டூர் கிராமத்தில் கொரட்டாம்பட்டு கிராமத்தில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

அந்த நிலத்தின் ஒரு பகுதியில் குடிசை வீடு ஒன்று உள்ளது. அதில் சுமார் 4 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை வீட்டின் கூரையில் பழனி தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பழனியின் மனைவி வள்ளி, மகள்கள் திரிஷா, மோனிஷா, சிவசக்தி, மகன் தனுசு ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவருடைய மகள் பூமிகா என்பவர் மட்டும் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூமிகாவை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கருத்துகள்