நாளொன்றுக்கு 5 பேர் போதைக்கு அடிமை- வெளியான திடுக்கிடும் தகவல்

இந்த நாட்டில் நாளொன்றுக்கு 5 பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகிறார்கள் என தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அம்பலாங்கொட பொல்வத்த பிரதேசத்தில் இன்று (14) காலி பிரிவு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்..

போதைப்பொருளுக்கு எதிராக போராடுவது பொலிஸாரின் கடமையாக இருப்பதுடன் சிவில் மக்களின் பொறுப்பு எனவும் தெரிவித்த திரு.அஜித் ரோஹண, பொலிஸாரால் மாத்திரம் இப்பணிகளை மேற்கொள்ள முடியாது எனவும் அதற்கு பொதுமக்களின் ஆதரவு தேவை எனவும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.