கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி இன்று (30) 55 ரூபாவிற்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக முட்டை சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அந்த மாவட்டங்களின் முக்கிய நகரங்களை மையமாக வைத்து இந்த வேலைத்திட்டம் இன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கடந்த 28ஆம் திகதி கொழும்பு மற்றும் கம்பஹாவில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

சந்தையில் முட்டையின் விலை 65 ரூபாவாக அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு, நுகர்வோருக்கு குறைந்த விலையில் முட்டையை விற்பனை செய்யும் திட்டத்தை விவசாய அமைச்சு முன்மொழிந்ததையடுத்து, முட்டை உற்பத்தியாளர்கள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர, முட்டை தேவைக்கு போதியளவு விநியோகத்தை வழங்க முடியாவிட்டாலும் தற்காலிகமாக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.