நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 05 மாவட்டங்களின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் மழை பெய்ய தொடங்கியதையடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நேற்றிரவு 9 மணி முதல் மீண்டும் நீடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.