மூன்று நகரங்களில் ATM கொள்ளை சம்பவங்கள் பதிவு !

இலங்கையின் மூன்று முக்கிய தென் நகரங்களில் ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கராப்பிட்டிய, ஹிக்கடுவ மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளில் உள்ள பல வங்கிகளின் ATM இயந்திரங்களை ஒரு குழுவினர் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட ரூ.11 மில்லியன் பணம் வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் குழுவினரால் திருடப்பட்டுள்ளது.

பொலிஸ் தரப்பில் தகவலின் அடிப்படையில் ரூ. 4.6 மில்லியன், ரூ. 275,000 மற்றும் ரூ.5.7 மில்லியன் மூன்று தனித்தனி ATM இயந்திரங்களில் இருந்து  திருடப்பட்டுள்ளது.

ATM மென்பொருளை ஹேக் செய்து இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.