தேசிய எல்லை நிர்ணய செயற்குழுவுக்கு சம்மாந்துறை பிரதேச சபை தொடர்பான ஆலோசனை சமர்பிப்பு

தேசிய எல்லை நிர்ணய செயற்குழுவுக்கும், OCD அமைப்பின் தலைவர் சமூக சேவையாளர் அஸ்மி யாசீன் மற்றும் ILM. மாஹிர் (அமைப்பாளர், அ.இ.ம.கா) இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.

இதன் போது கடந்த காலங்களில் 68581 (2020 சனத்தொகை புள்ளிவிபர திணைக்களம்) மக்கள் சனத்தொகை கொண்ட சம்மாந்துறைக்கு 20 பிரதேச சபை உறுப்பினர்கள் வழங்கப்பட்டதானது சம்மாந்துறைக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரும் அநீதி ஆகும். இந்த சனத்தொகையானது ஏனைய பிரதேச சபைகளின் சனத்தொகை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒப்பிடும் போது மிகக்குறைந்த எண்ணிக்கை என்பதனை தரவுகளின் அடிப்படையில் விபரிக்கப்பட்டது.

மேலும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள எல்லை நிர்ணய செயற்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுருத்தலின் படி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் போது சம்மாந்துறை பிரதேச சபைக்கு மேலும் அநீதி இழைக்கப்படும். இதனால் இக்குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக சம்மாந்துறை பிரதேச சபையையும் மற்றும் சனத்தொகையையும் ஒப்பிட்டு 15 வட்டாரங்களாக பிரித்து எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதோடு OCD அமைப்பின் சார்பான ஆலோசனையை தேசிய எல்லை நிர்ணய செயற்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது தேசிய எல்லை நிர்ணய செயற்குழுவின் ஏனைய அங்கத்தவர்களான Dr.K.தவலிங்கம் மற்றும் IA.ஹமீட் ஆகியோர் பங்குபற்றி இருந்தார்கள்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.