எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் சம்பிகா ராமவிக்ரம தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர்கள் கைவிரல் ரேகைகளைக் கொடுக்க மாத்திரமே திணைக்களத்திற்கு செல்ல வேண்டும் , இதற்காக 50 அலுவலகங்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இணையவழியில் பணம் செலுத்துபவர்களுக்கு கடவுச்சீட்டை வீட்டில் இருந்தே பெற்றுக் கொள்வதற்கும் , சாதாரண விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் வசதிகள் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.