இலங்கையில் மீண்டும் முகக்கவசத்தினை கட்டாயமாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு, அண்டை நாடான இந்தியாவும் அதன் சுகாதார நிலைமைகளை இறுக்குவதில் கவனம் செலுத்தியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் இலங்கையின் தயார்படுத்தல்கள் என்ன என்பது தொடர்பில் டெய்லி சிலோன் செய்திச் சேவை இது தொடர்பில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இடம் வினவிய போது;

“… முகக்கவசத்தின் முக்கியம் தொடர்பில் மக்கள் நன்கு புரிந்துள்ளனர். இந்நிலையில் நாம் அதனை காட்டயமாக்கத் தேவையில்ல. மக்கள் சிந்தித்துச் செயற்படுவார்கள். அவர்கள் அனைவரும் இந்நேரத்தில் ஒன்றிணைந்து இதனை அணிவதே சிறந்தது. முகக்கவசத்தினை மட்டும் பாவிக்காது ஏனைய சுகாதார வழிமுறைகளை கையாளுமாரும் மக்களிடம் கோருகிறோம். இடைவெளிகளை பேணுதல், கைகளை சுத்தப்படுத்தல், செனிடைசர் போன்றவற்றினை பாவித்தல் இவைகளும் இதில் அடங்குகின்றன. இவற்றினை கடைபிடித்தால் இந்த நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காணும் பரிசோதனைகள் விமான நிலையங்களில் தொடர்ந்தும் முன்னெடுக்கவில்லை, ஏனெனில் அது விஞ்ஞானபூர்வமாக தோன்றவில்லை. உலகளவில் கொரோனா அதிகரித்த போது இலங்கையில் தொற்றாளர்கள் குறைய இருந்த காலகட்டத்தில் பரிசோதனைகளை முன்னெடுத்த போதிலும் அது வெற்றியான ஒரு முறையல்ல.. இந்த பரிசோதனைகளில் எளிதில் தொற்றாளர்கள் இனங்காணப்பட மாட்டார்கள். எனவே இப்போது உலகில் எந்த நாட்டிலும் இந்த முறைகள் பாவிக்கப்படுவதில்லை. நாமும் அதனை நிறுத்திவிட்டோம்..” எனத் தெரிவித்திருந்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.