பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசிகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் அரிசி இறக்குமதியை அனுமதிப்பத்திர முறைக்கு உட்படுத்தி இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
 கப்பல்கள் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் அரிசிகள் மற்றும் டிசம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னர் இங்கு வந்த அரிசி துறைமுகத்தில் இருந்து விசேட அனுமதிப்பத்திரத்தின் மூலம் கடன் கடிதங்களை விடுவிக்க முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.