பொலிஸாரின் விசேட அறிவிப்பு

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த முன்னோடித் திட்டம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பணிப்பாளர் அலுவலகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கமல் சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கமல் சில்வா இதனைத் தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருள் பயன்படுத்தியோரை அடையாளம் காண்பதற்கு தேவையான உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.