மூன்று தலைமுறையினரை ஒன்று சேர்க்கும் சாதனையாளர் கெளரவிப்பு விழா

இலங்கையின் தமிழ் இலக்கியப் பரப்பின் முதுபெரும் எழுத்தாளுமை, ஆய்வாளர், கவிஞர், கதைஞர், சட்டத்தரணி, கலாபூஷணம், அல்ஹாஜ் எஸ். முத்துமீரான் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும்,

கல்வியலாளர், கவிஞர், கதைஞர், பேச்சாளர் கலாபூஷணம், அல்ஹாஜ் எஸ். அஹமது அவர்களுக்கு சாதனையாளர் விருதும்,

இளைய தலைமுறை எழுத்தாளரும் பேச்சாளருமான ஹசன் குத்தூஸ் ஜெம்ஸித் அவர்களுக்கு சாதனையாளர் விருதும் வழங்கும்

மூன்று தலைமுறையினரை ஒன்று சேர்க்கும்
சாதனையாளர் கெளரவிப்பு விழா நிந்தவூர் கலை இலக்கியப் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

இடம் : நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபம்
காலம் : 17.12.2022 காலை 9.00 மணி

தங்களது பெருமதியான வருகையை எதிர்பார்த்து  அன்புடன் அழைக்கிறோம்

விழாக்குழு,
சாதனையாளர் கெளரவிப்பு விழா,
நிந்தவூர் கலை இலக்கியப் பேரவை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.