உலகளாவிய அறிவுச் சுட்டெண்ணுக்கு அமைவாக 2022 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்ட 132 நாடுகளில் இலங்கை 79வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.


இலங்கைக்கு கிடைத்துள்ள சுட்டெண் 43.43 ஆகும். இது உலகளாவிய அறிவு குறியீட்டு சராசரி மதிப்பை விரைவில் தொடக்கூடியதாக அமைந்துள்ளது.


உலகளாவிய அறிவுக் குறியீட்டின் சராசரி மதிப்பு 46.5 , மேலும் உலகளாவிய அறிவுச் சுட்டெண்ணின் படி, தெற்காசியாவில் இலங்கை முன்னணி நாடு என்ற நிலையை எட்டியுள்ளது.


இந்த சுட்டெண்ணுக்கு அமைவாக , உலகின் தகவல் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடாக விளங்கும் இந்தியா, இலங்கையை விட குறைவான சுட்டெண் மதிப்புடன் காணப்படுகிறது.


இந்தியா இந்த பட்டியலில் 91வது இடத்தில் உள்ளது. பங்களாதேஸ் 105வது இடத்திலும், பூடான் 89வது இடத்திலும், பாகிஸ்தான் 110வது இடத்திலும், நேபாளம் 108வது இடத்திலும் உள்ளன.


ஐக்கிய நாடுகள் சபையின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் சர்வதேச அறிவு மன்றத்துடன் இணைந்து பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து இந்த சுட்டெண் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.


கல்வி, அறிவு, புத்தாக்கம், பொருளாதாரம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி இது தரப்படுத்தப்பட்டுள்ளது.


சமீபத்திய உலகளாவிய அறிவுக் குறியீட்டில் அமெரிக்கா 68.3.7 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது.


சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்திலும், சுவீடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பின்லாந்து, நெதர்லாந்து, லக்சம்பேர்க், டென்மார்க், நோர்வே, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரியா ஆகியவை முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.