இன்று நள்ளிரவு முதல் தடை

 இந்த ஆண்டு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (14) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

 பரீட்சை முடியும் வரை பரீட்சார்த்திகளுக்கான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 பரீட்சை மாதிரி வினாத்தாள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள், இலத்திரனியல், அச்சு ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது அல்லது தன்னகத்தே வைத்திருப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.