பலாலி விமான நிலையத்தின் சேவை மீண்டும் ஆரம்பம்

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பல வருடங்களின் பின்னர் இன்று (12) விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இன்று (12) காலை சென்னையில் இருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தடைந்தது.

பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைகள் கொரோனா தொற்று மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது 2,250 மில்லியன் செலவில் பலாலி சர்வதேச விமான நிலையம் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புதிய விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து பலாலிக்கான விமானங்கள் வாரத்தின் ஒவ்வொரு திங்கள், செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் சேவையில் ஈடுபட உள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.