முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்தான அறிவிப்பு!

திருத்தப்பட்ட முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை இன்று (15) நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் அறிவிப்பின் பிரகாரம் புதிய திருத்தப்பட்ட விலை அறிவிக்கப்படும் என குறித்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (14) உத்தரவிட்டது.

முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்த போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.