கஹட்டோவிட்ட இக்ரா பாலர் பாடசாலை மாணவர்களின் 2022 ஆம் வருடத்திற்கான கலை நிகழ்ச்சிகள் கடந்த 07 ஆம் திகதி கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிக்கா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் சமீர ஜயவர்தன கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக நவ லங்கா நிதஹஸ் பக்ஷய கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் ருஷ்தி உஸ்மான், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர்களான நஜீம் மற்றும் இன்சாப், கஹட்டோவிட்ட YMMA கிளை தலைவர் அல்ஹாஜ் பிர்தவ்ஸ் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக