இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் அஹ்மத் ஸாதிக்கின் வேண்டுகோளுக்கு இணங்க களுத்துறை மாவட்டத்தில் விளையாட்டுத்துறைக்கு ஊக்குவிப்பு வழங்க பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம் முன்வந்துள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் Tareq Mohamed Ariful Islam அவர்களை இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் அஹ்மத் ஸாதிக் அவர்கள் சந்தித்ததன் விளைவாக அவரின் வேண்டுகோளுக்கு இணங்க களுத்துறை மாவட்டத்தில் விளையாட்டுத்துறைக்கு ஊக்குவிப்பு வழங்க பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம் முன்வந்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை மட்ட கடின பந்து கிரிக்கெட் விளையாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பேருவளை அல்-ஹுமைசரா தேசிய பாடசாலை மற்றும் பண்டாரநாயக்க மத்திய கல்லூரி, பயாகல ஆகியவற்றுக்கு இடையில் கடினப்பந்து கிரிக்கெட் போட்டி இடம்பெறவுள்ளது.

இந்த திட்டத்திற்கு பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயம் நிதியுதவி வழங்கியது.

இச்செயற்திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கையான, இரு அணிகளையும் அறிமுகப்படுத்தும் நிகழ்வும் வெற்றிக்கிண்ண வெளியீட்டு விழாவும் இன்று டிசம்பர் மாதம் 21 ம் திகதி அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் மதிப்பிற்குரிய Tareq Mohame Ariful Islam அவர்கள் கலந்து கொண்டார். மேலும் பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர். இரு பாடசாலைகளினதும் அதிபர்கள், மாணவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், கிரிக்கெட் வீரர்கள் அத்தோடு அவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மற்றும் அபிவிருத்திச் சங்கு உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் கிரிக்கெட் போட்டியானது எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் அஹ்மத் ஸாதிக் அவர்களின் வெளிவிவகாரம் தொடர்பான இரண்டாவது செயற்திட்டம் இதுவாகும். இதற்கு முன்பும் 3 மில்லியன் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை களுத்துறை மாவட்டத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் வழங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.