சந்திரனிலிருந்து திரும்பிய ஓரியன் விண்கலம் பசுபிக் சமுத்திரத்தில் இறங்கியது


சந்திரனுக்கு சென்று திரும்பிய நாசாவின் ஓரியன் விண்கலம் பசுபிக் சுமுத்திரத்தில் நேற்று (11) வந்திறங்கியது. 

இவ்விண்கலம் 25 நாட்களுக்கு மேல் சந்திரனை வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது,

எதிர்காலத்தில் மனிதர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்பும் நாசாவின் திட்டத்தின் நோக்குடன், ஆர்டிமிஸ்-1 (Artemis 1 பயணத்தின் கீழ் ஓரியன் (Orion) விண்கலம் கடந்த நவம்பர் 16 ஆம்  திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

மணித்தியாலத்துக்கு 40,000 கிலோமீற்றர் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்துக்குள் பிரவேசித் இவ்விண்கலம் பசுபிக் சமுத்திரத்தில் இறங்கி,  3 பெரிய பரசூட்கள் உதவியுடன் மிதந்துகொண்டிருந்தது. 

உடனடியாக ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டதில், அவ்விண்கலத்துக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என அறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது நாசாவுக்கும், அமெரிக்காவுக்கும், எமது சர்வதேச பங்காளர்களுக்கும் முழு மனித குலத்துக்கும் பாரிய வெற்றியாகும் என நாசா நிர்வரி பில் நெல்சன் கூறியுள்ளார். 

இவ்விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது 2800 பாகை செல்சியஸ் வெப்பநிலைக்கு தாக்குப்பிடிக்க வேண்டியிருந்தது.

ஓரியன் விண்கலத்தின் வெப்பதடுப்புக் கவசத்தை பரிசோதிப்பதே ஆர்டிமிஸ்-1 பயணத்தின் பிரதான இலக்காக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஓரியன் விண்கலம் 2.1 மில்லியன் கிலோமீற்றர்களுக்கு (1.3 மில்லியன் மைல்) அதிகமான தூரம் பயணம் செய்துள்ளது. மனிதர்களை ஏற்றிச்செல்லக்கூடிய விண்கலமொன்று பயணம் செய்த மிக நீண்ட தூரம் இதுவாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.