பதவி விலகுவாரா எலன் மஸ்க்?

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து தாம் பதவி விலக வேண்டுமா என்பது குறித்து பதிவாளர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என்று எலான் மஸ்க் ட்வீட் செய்தார்.

ட்விட்டரில் ஆம்/இல்லை என வாக்களிக்கக்கோரி பதிவிட்டுள்ளார் அதன் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்.

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என்றே பெரும்பாலானோர் வாக்களித்து உள்ளனர்.
திங்கள்கிழமை(டிச.19) காலை 07:00 மணி வரை, அவரது கருத்துக்கணிப்பில் 13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்தனர். 

57% பேர் எலான் மஸ்க் பதவி விலகுவதற்கு ஆம் என்று தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே டிரம்புக்கு வாக்கெடுப்பு நடத்தி அவரது ட்விட்டர் கணக்கை திரும்ப கொண்டுவந்தார் எலான் மஸ்க்.

 டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக,ட்விட்டரில் பிரபலங்கள் பெயரில் உள்ள போலி கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ட்விட்டர் நிறுவனத் தலைவராக எலான் மஸ்க் பதவியேற்ற பிறகு, 50% ஊழியர்களான சுமார் 7,500 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும் பலர் தானாகவே வெளியேறினர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.