இரவு பொருளாதாரம் இலங்கையின் கலாச்சாரத்தை அழித்துவிடும்

இலங்கையின் கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள இரவு பொருளாதாரம் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு தலைமை தாங்குமாறு மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதத் தலைவர்களையும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

பௌத்தத்தால் போஷிக்கப்பட்ட இலங்கையின் கலாசாரத்தை இரவு பொருளாதாரச் செயற்பாடுகளால் அழிப்பதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்துவிட்டு இலங்கைக்கு வந்துள்ள சிலர் இரவுபொருளாதாரம் மற்றும் கஞ்சா வளர்ப்பு நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளனர். இவர்களே இலங்கையை போதைப்பொருள் அற்ற நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாவும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவது பற்றி பேசுகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.