நாளை பாடசாலைகள் வழமைபோல் நடைபெறும்.கல்வி அமைச்சு  சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பாடசாலைகளை நாளை (12) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த் குமார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்தநிலையில், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு நாளை முதல் மீண்டும் பாடசாலைகளை வழமைபோல நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, மோசமான காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறத்தல் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்க, நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளும் நாளை (12) மீண்டும் திறக்கப்படும் என ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.