கண்டி எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் புதிய நிர்வாக உத்தியோகத்தர் தெரிவு

கண்டி எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் விசேட ஒன்றுகூடல் கடந்த புதன்கிழமை (07) கொழும்பிலுள்ள அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்விற்கு பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் தலைவி ஓய்வு பெற்ற அதிபர் ஹாஜியானி நாகூர் உம்மா காதர் (ஜே.பி) அவர்கள் தலைமை தாங்கினார். குறித்த நிகழ்வின் விசேட அதிதியாக கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் எம்.ஜி. நயீமுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் போது பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளைக்கான புதிய நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டனர். கிளையின் தலைவியாக ஓய்வு பெற்ற அதிபர் ஹாஜியானி நாகூர் உம்மா காதர் (ஜே.பி) அவர்களும், கிளையின் செயலாளராக கொழும்பு மாவட்ட முஸ்லிம் விவாகப் பதிவாளர் அல்ஹாஜ் நாகூர் றஹீம் (ஜே.பி.) அவர்களும் மீண்டும் சபையோரால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர். 
பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் பொருளாளராக தேசகீர்த்தி மௌலவி இப்ராஹீம் முத்தலீப் (ஜே.பி) அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். அதேவேளை கிளையின் உப செயலாளராக அரசாங்க தகவல் திணைக்களத்தில் தகவல் அதிகாரியாக பணிபுரியும் எஸ்.ஏ.எம். பவாஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் செயற்குழு உறுப்பினர்களாக சி.எம்.எம். சுபைர், ஏ.சி.எம். முஸம்மில், எம்.எப்.எம். ஐயூப்கான், ஏ.எம். நவாஸ், எம்.ஏ.எம். முபீன், டி.என். இஸ்ரா, னுச. ஹைரூன்னிஸா, எம்.ஏ.எம். முக்ரம் மௌலவி, ஐ. இஸ்ஹாக், ஏ.டபிள்யு. அல் அமீன், ஏ.எல். ஜெஸீமா ஆசிரியை, எம்.ஐ. நாஜிரா ஆசிரியை, ஆர். எம். ரிப்கான், ஏ.ஜீ.எம். பௌசர், ஏ.எம்.எம்.ஏ. ஜின்னாஹ், எம்.என்.எம். பைரூஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.