மெஸ்ஸி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

உலகக்கிண்ண காற்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா வெற்றி பெற்றதையடுத்து, சர்வதேச காற்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என லயனல் மெஸ்ஸி நேற்று (18) தெரிவித்துள்ளார்.

உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளில் விளையாட விரும்புவதாக ஆர்ஜென்டினாவில் செய்தியாளர்களிடம் மெஸ்ஸி கூறியுள்ளார்.

ஒரு காற்பந்து வீரர் பெறக்கூடிய ஒவ்வொரு கிண்ணத்தையும் வென்றுவிட்டதாகவும், இறுதியாக உலகக்கிண்ணத்தையும் வென்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இதுவே தனது கடைசி உலகக்கிண்ணம் என்று அவர் குறிப்பிட்டார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.