கொரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கர்நாடக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
சீனா உள்பட சில நாடுகளில் கொரோனா நோய் தொற்றின் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை பின்பற்றுவது போன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டும் சில கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது:
திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். உணவகங்கள், நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் நள்ளிரவு 1 மணிக்குள் நிறைவடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளை விட கட்டுப்பாடுகள் குறைவாகவே உள்ளது என்றாலும், சூழலுக்கேற்ப மத்திய அரசின் அறிவுறுத்தல்படி கட்டுப்பாடுகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.