ஒரு வைத்தியரின் உண்மையான வைத்திய சேவை!  
வீட்டில் இருந்தவாறு நாடு நிசியில் வைத்தியசாலைக்கு  ஓடி வந்த வைத்தியர்!

பதுளை பொது வைத்தியசாலையின்  அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்கானிப்பில் இருந்த மூவருக்கு திடீரென ஏற்பட்ட  அவசர சிகிச்சை காரணமாக வைத்தியசாலை ஊழியர்களால் வைத்தியருக்கு  அவசரமாக  அழைப்பினை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டில் ஓய்வில் இருந்த அவசர பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் பாலித ராஜபக்ஷ தனது கண்ணாடியை கூட மறந்து வீட்டிலிருந்தவாறு காற்சட்டடையுடன் ஓடிவந்து சிக்கிச்சையளித்துள்ளமை பெரும் பாராட்ட்டுக்களை பெற்றுள்ளது. 

குறிப்பிட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைகள் அளித்த வைத்தியர் வேறு ஒருவரது கண்ணாடியை பயன்படுத்தி மருத்துவக் கடமையில் ஈடுபட்டுள்ளார்.

இதனை வைத்தியசாலையில் இருந்த சிலர் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவ் விடயமானது ஏனைய வைத்தியர்களுக்கு  இது ஒரு முன்மாதிரியை இருக்கட்டும் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.