போர்த்துக்கல் அணியின் பயிற்சியாளர் பதவி விலகினார்

போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பெர்னாண்டோ சான்டோஸ் விலகியுள்ளார்,

உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரின் காலிறுதி ஆட்டத்தில், மொரோக்கோ அணிக்கு எதிராக போர்ச்சுக்கல் தோல்வியடைந்தது. 

இந்நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார். 2022 கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் தென் கொரியாவிற்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், நட்சத்திர வீரர் ரொனால்டோவை வெளியே அமரவைத்து போர்ச்சுகல் அணியை ஆடவைத்தார் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ். 

அந்த போட்டியின் போதே ஏமாற்றத்தை சந்தித்த ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.குறிப்பாக மொராக்கோ அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்ட ரொனால்டோ ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில்தான் களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.