கொழும்பின் பல பிரதேசங்களுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (10) 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை  தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை  குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே, கடுவெல மாநகர சபை பிரதேசங்கள்.

மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள், கொட்டிகாவத்தை, முல்லேரியா, பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்க தேவையான தண்ணீரை முன்கூட்டியே சேகரித்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை  மக்களை வலியுறுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.