அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் வேண்டுகோளுக்கு இணங்க அல் ஹிமா இஸ்லாமிக் சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் அல் ஹாஜ் நூறுல்லாஹ் நளீமி அவர்களின் முயற்சியில் குவைட் நாட்டின் நிதியொதுக்கீட்டில் அனுராதபுரம் பமுனுகம பிரதேசத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் 2022.12.28 அன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் மற்றும் அல் ஹிமா இஸ்லாமிக் சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் நூறுள்ளாஹ் நளீமி ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பமுனுகம பெரிய பள்ளிவாயல் தலைவர், நலன்விரும்பிகள், ஊர்வாசிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். சுமார் 10 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மூலம் பமுனுகம பிரதேசத்தில் வசிக்கும் 450 இற்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.