இலங்கையில் முதல் முறையாக முழு மின்சார பைக் அறிமுகம்

TestingRikas
By -
0
இலங்கையின் முதல் முழு மின்சார பைக், ‘OKAYA electric’ நேற்று (14) அறிமுகப்படுத்தப்பட்டது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இலங்கையின் டக்ளஸ் அண்ட் சன்ஸ் மற்றும் இந்திய இரு சக்கர வாகன நிறுவனமான ஒகாயா எலக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இது தொடங்கப்பட்டுள்ளதாக அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)