மாணவன் ஊடாக மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாடசாலை மாணவர் ஒருவரின் ஊடாக ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்த நால்வர் ஹொரணை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் 13 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 மாத்திரைகள் இருந்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (5) மில்லனிய மற்றும் பரகஸ்தோட்டை ஆகிய பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரின் ஊடாக இந்த போதைப்பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக விசேட அதிரடிப்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மல்லனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.