சிவனொளிபாதமலை யாத்திரை நாளை ஆரம்பம்

நாளை(07) ஆரம்பிக்கப்பட உள்ள சிவனொலிபாதமலை புனித யாத்திரையை முன்னிட்டு இன்று(06) காலை பெல்மடுல்ல கல்பொத்தாவெல சிவனொலிபாதமலை விகாரையில் இருந்து புனித தந்த தாது பெரஹெர மூலம் சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இன்று(06) காலை பெல்மதுளை கல்பொத்தாவெல விகாரையில் இருந்து புனித தந்த தாது பெரஹெர மூலம் நான்கு வீதிகளின் ஊடாக சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பலாங்கொடை பொகவந்தலாவ வீதி, அவிசாவளை ஹட்டன் வீதி, இரத்தினபுரி பலாபந்த வீதி, குருவிட்ட ஏரத்ன ஆகிய நான்கு வீதிகளின் ஊடாக பெரஹெர சிவனொளிபாதமலையை நோக்கி சென்றது.

மேற்படி பெல்மடுல்ல-கல்பொத்தாவெல விகாரையில் இருந்து புனித தந்த தாது சிவனொளிபாதமலைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பு பெல்மடுல்ல கல்பொத்தாவெல விகாரையில் நேற்று (05) மாலையும் இன்று (06) அதிகாலையும் சிவனொளிபாதமலையின் பிரதமகுருவும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் குலபதியுமான வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதின்ன நாஹியன் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

மேற்படி இடம்பெற்ற பூஜை மற்றும பெரஹெர வழிபாடு நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ, சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் சுனில் ஜயலத், இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொகுபோதாகம, மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் மஞ்சுலா இதிகாவெல உட்பட பெருந்திரலான பக்த அடியார்களும்; கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.