லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி புதிய விலை, ரூ.4,650.

5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவாவினால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை, ரூ.1,850.

மேலும், 2.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவாவினால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை, ரூ.860.

இந்த விலை அதிகரிப்பு இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.