அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடத் தயார் என வெளியாகும் செய்திகள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.
ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் பின்வரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
“மத்திய வங்கியின் ஆளுநராகவோ அல்லது வேறு எந்த வகையிலோ, எந்த நேரத்திலும் அரசியல், கட்சி அரசியல் அல்லது எந்த அரசியலிலும் ஈடுபடும் நம்பிக்கை எனக்கு இல்லை. எனக்கு உண்மையில் அப்படி ஒரு யோசனை இல்லை.
உண்மையில் ஒரு மத்திய வங்கி ஆளுநருக்கு அவ்வாறான யோசனை இருக்கக் கூடாது என்பதே எனது கருத்து. அதற்குக் காரணம் உண்டு.
நாட்டின் நிதிக் கொள்கையின் முக்கியப் பொறுப்பைக் கொண்டவர் மத்திய வங்கி ஆளுநர். நிதிக் கொள்கையை அமுல்படுத்துவதில் அதிரடியான முடிவுகளை எடுக்கக் கூடாது. வட்டி விகிதத்தை உயர்த்தினோம். இது பலருக்கு பிடிக்காது.
ஆனால் நான் அரசியல் செய்ய நினைக்கும் நபராக இருந்தால் அந்த முடிவை எடுக்க மாட்டேன். நான் உறுதியான முடிவுகளை எடுக்க விரும்புகிறேன். அதனால்தான் மத்திய வங்கி ஆளுநர் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது முதல் கொள்கை. மத்திய வங்கியும் சுதந்திரமாக இருக்க வேண்டும். நியமிக்கப்பட்ட நபரும் சுதந்திரமாக இருக்க வேண்டும். நியமிக்கப்படும் நபர் அரசியல் சார்பற்றவராக இருக்க வேண்டும். அரசியலில் நம்பிக்கை இல்லாதவராக இருக்க வேண்டும். அப்போதுதான் மத்திய வங்கியின் சுதந்திரம் சரியான, பிரபலமான அல்லது யாரின் செல்வாக்குமற்ற முடிவுகளை எடுக்க முடியும். இது ஒரு அடிப்படை தேவை. . அதன் காரணமாகவே இன்று நாம் இந்த நிலையில் இருக்கின்றோம் என்பது எனது கருத்து.
மத்திய வங்கி ஆளுநராக எனக்கு ஒரு போதும் அரசலில் நம்பிக்கை இல்லை. என்று அவர் தெரிவித்துள்ளார்.