பனை அபிவிருத்திச் சபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் கணக்காய்வாளர் ஆகியோர் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இருவர் சேவையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜ தெரிவித்தார்.

பனை அபிவிருத்தி சபையில் இடம்பெற்ற 38 மில்லியன் ரூபா நிதி மோசடி மற்றும் கடமையிலிருந்து தவறியமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில்  துறைசார் அமைச்சினூடாக நடத்தப்பட்ட கணக்காய்வில் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

பனங்கருப்பட்டி தயாரிப்பிற்காக கொண்டுவரப்பட்ட இயந்திரத்தை எவ்வித பயன்பாடுமின்றி பழுதடைவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கூறியுள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதி பொது முகாமையாளர் மற்றும் கண்காய்வாளர் ஆகியோர் பனை அபிவிருத்தி சபையில் சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் அதேநேரம், இரு பல்கலைக்கழகங்களில்  பணியாற்றியுள்ளதுடன், அங்கும் சம்பளத்தை பெற்றுக் கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜ சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.