கொழும்பு-குருநாகல் பிரதான வீதியில் பஸ் விபத்து.

 கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் மெட்டிக்கும்புர அருகே இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று (12) அதிகாலை 04.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து மற்றைய பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரம் பேருந்து டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையின் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் பின்னால் வந்த பேருந்து நடத்துனர் மற்றும் முன் இருக்கையில் இருந்த பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.

 அவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.