M.M.Fathima Nasriya

நிருவாக உத்தியோகத்தராக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சேவையாற்றிய கிருஷ்ணபிள்ளை தயாபரன், சேவைத்திறன் அடிப்படையில் நியமனம் பெற்ற 5 வீத இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மாவட்ட செயலகத்தில் 30 வருடகாலமாக, மட்டக்களப்பு மாவட்ட 10 அரசாங்க அதிபர்களின் கீழ் பணியாற்றிய அனுபவத்தை தனதாக்கியுள்ளார்.

அத்துடன் தனது சேவைக்காலத்தில் பேராதனைப் பல்கலைகழகத்தின் இளமாணி மற்றும் மதுரை காமராஜன் பல்கலைகத்தின் முதுமாணி, மற்றும் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தில் அலுவலக முகாமைத்துவ டிப்ளோமா ஆகிய பட்டங்களையும் பெற்று அவரின் சேவைத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தனது முதலாவது அரசாங்க நியமனத்தை 1991.03.18ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இலங்கை பொது எழுதுவினைஞராகப் (தரம் ii ஆ) பெற்றிருந்தார்.

அன்றிலிருந்து 2002.06.19 ஆம் திகதி வரை பொது எழுதுவினைஞராகவும், 2002.06.20 முதல் 23.12.2022 வரையான காலப்பகுதியில் இலங்கை நிருவாக உத்தியோகத்தர், சுப்ரா தரத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தராகப் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திறமை அடிப்படையில் இலங்கை நிர்வாக சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சை (2013/2021) பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் கடந்த ஏப்ரல் மாதம் நடாத்தப்பட்டது.

எழுத்து பரீட்சை, சேவை மூப்பு மற்றும் நேர்முகப் பரீட்சை என்பவற்றில் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில், அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 12 பேர் இவ்வாறு தேரிவு செய்யப்பட்டனர்.

தெரிவு செய்யப்பட்ட அலுவலர்களை இலங்கை நிர்வாக சேவை தரம் III இற்கு, அரசாங்க சேவைகள் ஆணைக்குழு நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.