மருந்து தட்டுப்பாடு குறைகிறது

மருந்து தட்டுப்பாடு குறைகிறது

நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடையக்கூடும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

27 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் நேற்று முன்தினம் (11) கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதனிடையே, 42 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்