எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

உலகையே உலுக்கிய சுனாமி பேரனர்த்தம்  இடம் பெற்று இன்றுடன் 18 வருடங்களாகின்றது.

அதை முன்னிட்டு ஏவி கல்குடா டைவர்ஸ் அணியினால் விஷேட நீச்சல் பயிற்சி பட்டறை இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பதினொறாவது நாளான இலவச நீச்சல் பயிற்சியும் அதோடு இணைந்து அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்களுக்கான மூன்றாவது நாள் நீச்சல் பயிற்சியும்  இன்று 26.12.2022ம் திகதி  ஞாயிற்றுக்கிழமை பாசிக்குடாவில் அமைந்துள்ள மெரீனா பீச் ஹோட்டல் நீச்சல் தடாகத்தில்   “ஶ்ரீலங்கா லைப் காட்” வழிகாட்டலுடன் கல்குடா டைவர்ஸ் பயிற்றுனர்களால் நடாத்தப்பட்டது.

இன்று காலை 9.00 தொடங்கி மதியம் 1.00 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வுக்கான வாகன வசதிகளை அக்கீல் எமர்ஜன்சி நிறுவன தலைவர் ஏ.சீ.எம்.நியாஸ்தீன் ஹாஜியார் செய்திருந்தார்.

“கல்குடா டைவர்ஸ்” அணியின் விஷேட சுழியோடி ஹலீம் அவர்கள் மற்றும் ஷக்கி ஆகியோர் கலந்து கொண்டவர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும், சுழியோடி பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சிகள் ஒவ்வொருவரின் நிலைகளைப் பொறுத்து பயிற்சிகள் பயிற்றுவிப்பாளர்களினால் வழங்கப்பட்டது. 

இதில் தொடர்சியாக ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் இவ் இளைஞர்கள் மத்தியில் தற்போது பல்வேறு மாற்றங்களையும் குறுகிய நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை நீந்தி கடக்க கூடிய முன்னேற்றத்தை அவதானிக்க முடிந்தது.

ஆகவே, ஆர்வமுள்ள இளைஞர்கள் கல்குடா டைவர்ஸ் அணியைத்தொடர்பு கொண்டு இவ்வரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் இலவசமாக நீச்சல் பயிற்சியை கற்றுக் கொள்ள முன்வருமாறு கல்குடா டைவர்ஸ் அணி கேட்டுக்கொள்கிறது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.